தேர்தல் வாக்காளர் அடையாள அட்டையானது நமது அடையாளச் சான்றுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு கண்டிப்பாக இந்த அடையாள அட்டை தேவை. தேர்தல்களின் போது ஆள்மாறாட்டம் மற்றும் மோசடியைத் தடுக்க இந்த அடையாள அட்டை உதவுகின்றன.
வாக்காளர் அடையாள அட்டையில் ஒரு தனித்துவமான வரிசை எண், அட்டைதாரரின் பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தையின் பெயர், புகைப்படம், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் ஹாலோகிராம், தங்கியிருக்கும் முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொண்டிருக்கும். குறைந்த பட்சம் 18 வயது மற்றும் நிரந்தர முகவரி கொண்ட ஒரு இந்திய குடிமகன் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க அடையாளம், முகவரி மற்றும் புகைப்படத்தின் சான்று தேவை.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நீங்கள் முதலில் https://eci.gov.in/ என்ற வலைதளத்தில் செல்ல வேண்டும்.
அதில் 'National Voters Services Portal' என்பதை கிளிக் செய்யவும்.
அதில் உங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்களை உள்ளிட்டு அவற்றுக்குத் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும்.
வழங்கப்பட்ட ஐடியில் தனிப்பட்ட வாக்காளரின் அடையாளப் பக்கத்துடன் இணைப்பைக் கொண்ட மின்னஞ்சல் அனுப்பப்படும். இதன் மூலம் வாக்காளர் அடையாள விண்ணப்பத்தை நீங்கள் கண்காணிக்கலாம்.
விண்ணப்பித்த நாளிலிருந்து 10 நாள் முதல் ஒரு மாதத்தில் வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு வந்து சேரும்.
வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு வந்துசேராவிட்டால் நீங்கள் அருகிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் விசாரிக்கலாம். அல்லது தலைமைத் தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.